
முதல் ஆட்டத்தில் சுவாதி வெள்ளை நிறக் காய்களுடன் மிஷைல்கேத்ரினாவின் கேரோகான் முறையிலான ஆட்டத்தை எதிர்கொண்டார். 27 வது நகர்த்தலில் யானையினை பறிகொடுத்த ஸ்வாதி காட்டே 42 வது நகர்த்தலின்போது தனது தோல்வியினை ஒப்புக்கொண்டார். மற்றொரு ஆட்டத்தில் விஜயலக்ஷ்மியும் வர்ஷிணியும் “நிம்சோ” முறையில் ஆட்டத்தை துவக்கினர். ஆட்டம் டிராவாகும் என்று எண்ணியிருந்தவேளையில் 56 வது நகர்த்தலில் வர்ஷினி மாபெரும் தவறு செய்து தனது யானையை முழுசாகப் பறிகொடுத்ததுடன் ஆட்டத்தையும் பறிகொடுத்தார்.…