
ஏர் இந்தியாவின் விஜயலக்ஷ்மி கருப்பு நிறக்காய்களுடன் தமிழகத்தின் வைஷாலியுடன் மோதினார்.சிசிலியன் முறையிலான ஆட்டத்தில் 19 வது நகர்த்தலிலேயே இருவரும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர். மற்றொரு ஆட்டத்தில் எல் ஐ சியின் ஸ்வாதி பிரெஞ்ச் வகையிலான ஆட்டத்தில் தமிழத்தின் மகாலக்ஷ்மியுடன் மோதினார்.ஆரம்பம் முதலே சுவாதியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் மகாலட்சுமி திணறினார். 34 வது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். மிஷைல் கேத்ரினா[ஏர் இந்தியா] தரிணி கோயல்[சண்டிகர்] இடையிலான ஆட்டத்தில் மிகுந்த…