முதல் ஆட்டத்தில் சுவாதி வெள்ளை நிறக் காய்களுடன் மிஷைல்கேத்ரினாவின் கேரோகான்
முறையிலான ஆட்டத்தை எதிர்கொண்டார். 27 வது நகர்த்தலில் யானையினை பறிகொடுத்த
ஸ்வாதி காட்டே 42 வது நகர்த்தலின்போது தனது தோல்வியினை ஒப்புக்கொண்டார்.
மற்றொரு ஆட்டத்தில் விஜயலக்ஷ்மியும் வர்ஷிணியும் “நிம்சோ” முறையில் ஆட்டத்தை
துவக்கினர். ஆட்டம் டிராவாகும் என்று எண்ணியிருந்தவேளையில் 56 வது நகர்த்தலில் வர்ஷினி மாபெரும் தவறு செய்து தனது யானையை முழுசாகப் பறிகொடுத்ததுடன் ஆட்டத்தையும் பறிகொடுத்தார்.
இன்னொரு ஆட்டத்தில் தமிழகத்தின் பால கண்ணம்மா பெட்ரோலியத்தின் சௌம்யாவிடம்
போராடித் தோல்வியைத் தழுவினார்.
மற்றொரு ஆட்டத்தில் கிரண் மனிஷாவும் வைஷாலியும் டிரா செய்துகொண்டனர்.
பத்தாவது சுற்றின் சில முக்கிய முடிவுகள் :
சுவாதி [எல் ஐ சி] [7.5] தோல்வி மிஷைல் கேத்ரினா [ஏர் இந்தியா][8]
விஜயலக்ஷ்மி[ஏர் இந்தியா] [8.5] வெற்றி வர்ஷினி [தமிழகம்] [6.5]
கிரண் மனிஷா [எல் ஐ சி] [7] டிரா வைஷாலி [தமிழகம் [7.5]
பால கண்ணம்மா[தமிழகம்] [6.5] தோல்வி சௌம்யா [பெட்ரோலியம்] [7.5]
லஷ்யா[ஆந்திரா] [7] டிரா அர்பிதா [மே..வங்கம்] [7]
பத்தாவது சுற்றின் முடிவில் ஏர் இந்தியாவின் விஜயலக்ஷ்மி 8.5 புள்ளிகளுடன் மீண்டும் முன்னிலை பெற்றார்.
நாளைய ஆட்டத்தை டிரா செய்தாலே இந்தபோட்டியின் பட்டம் வெல்வது உறுதி என
கருதப்படுகிறது.
மற்றொரு ஏர் இந்தியா வீராங்கனை மிஷைல் கேத்ரினா எட்டு புள்ளிகளுடன் இரண்டாவது
இடம் பெற்று உள்ளார்.
நாளை நடைபெற உள்ள இறுதிச்சுற்றின் முடிவைபொருத்தே சாம்பியன் யார் என்பது தெரியும்.