43வது மகளிர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் – சென்னை
தமிழ்நாடு சதுரங்க கழகம் பெருமையுடன் நடத்திய தேசிய மகளிர் செஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இனிதே நடந்து முடிந்தது..
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிருந்தும் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியின் பதினோறாவது இறுதிச் சுற்று இன்று காலை நடை பெற்றது.
விஜயலக்ஷ்
டிரா செய்தாலே சாம்பியன் என்கிற நிலையில் மேரி ஆன் கோம்சுடன் “சிசிலியன்” முறையில்
விஜயலக்ஷ்மி ஆட ஆரம்பித்தார்.வெற்றி கிட்டாது என்ற நிலை வந்தததும் 48 வது நகர்த்தலில் கோம்ஸ் டிரா செய்துகொண்டார்.
9 புள்ளிகள் பெற்று விஜயலக்ஷ்மி முதல் பரிசான ரூபாய் 72,௦௦௦ ஐயும் கோப்பையையும் வென்றார்.
மற்றொரு ஆட்டத்தில் வைஷாலி ,மிஷைல் கேத்ரினாவின் “கேடலான்’ முறையிலான
ஆட்டத்தை எதிர்கொண்டார்.33 வது நகர்தலில் தோல்வியைத் தவிர்பதற்காக “மீண்டும் மீண்டும் செக்” என்ற முறையில் டிரா செய்து கொண்டார்.
தேசிய செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் முதல் பத்து பரிசு பெற்ற வீராங்கனைகள்:
1] விஜயலக்ஷ்மி [ஏர் இந்தியா] 9.௦ புள்ளி
2] மிஷைல் கேத்ரினா. [ஏர் இந்தியா] 8.5
3]மகாலட்சுமி [தமிழ்நாடு]
4]சுவாதி காட்டே [எல் ஐ சி] 8.0
5] சௌம்யா சுவாமிநாதன் [பெட்ரோலியம்] 8.0
6] ஈஷா கரவாடே [பெட்ரோலியம்] 8.0
7] வைஷாலி [தமிழ்நாடு]
8] பால கண்ணம்மா [தமிழ்நாடு]
9] பிரத்யுஷா போடா [ஆந்திரா] 7.5
1௦] மகோதா நிஷா[பெட்ரோலியம்]
மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆசிய சதுரங்க சம்மேளனத்தின்
துணைத்தலைவர் திரு.பரத் சிங் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு
வீராங்கனைளுக்கு பரிசளித்தார்.
விஜயலக்ஷ்மி அவருடைய மகன் ஆர்யாவுடன் வந்து பரிசினை வாங்கினார்.
திரு.சுந்தர் [துணைத்தலைவர்,உலக சதுரங்க சம்மேளனம்] அவர்கள் வீராங்கனைகளை வாழ்த்தி பேசினார்.
திரு.முருகவேல்[ துணைத்தலைவர்,தமிழ்நாடு செஸ் சங்கம்] தலைமை உரை ஆற்றினார்.
திரு.விஜயராகவன் அனைவரையும் வரவேற்றார். திரு. ஸ்ரீவத்சன் நன்றி தெரிவித்தார். திரு.கோபாலகிருஷ்ணன் இணைப்புரை வழங்கினார்.