ஏர் இந்தியாவின் விஜயலக்ஷ்மி கருப்பு நிறக்காய்களுடன் தமிழகத்தின் வைஷாலியுடன் மோதினார்.சிசிலியன் முறையிலான ஆட்டத்தில் 19 வது நகர்த்தலிலேயே இருவரும் சமாதான
ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் எல் ஐ சியின் ஸ்வாதி பிரெஞ்ச் வகையிலான ஆட்டத்தில் தமிழத்தின்
மகாலக்ஷ்மியுடன் மோதினார்.ஆரம்பம் முதலே சுவாதியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் மகாலட்சுமி திணறினார். 34 வது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
மிஷைல் கேத்ரினா[ஏர் இந்தியா] தரிணி கோயல்[சண்டிகர்] இடையிலான ஆட்டத்தில் மிகுந்த இழுபறிக்குப்பிறகு மிஷைல் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்கத்தின் அர்பிதாமுகர்ஜி எல் ஐ சி யின் கிரண் மனிஷாவுடன் டிரா செய்தார்.
ஈஷா கரவாடே,பால கண்ணம்மா இடையிலான ஆட்டமும் டிராவானது.
ஒன்பதாவது சுற்றின் முடிவில் விஜயலக்ஷ்மியும், சுவாதி காட்டேவும் தலா 7.5 புள்ளிகளுடன்
முதலிடம் பிடித்தனர்.
ஒன்பதாவது சுற்றின் சில முக்கிய முடிவுகள்:
வைஷாலி [தமிழகம்] [7] டிரா விஜயலக்ஷ்மி [ஏர் இந்தியா] [7.5]
ஸ்வாதி காட்டே[எல் ஐ சி] [7.5] வெற்றி மகாலட்சுமி [தமிழகம்] [6]
மிஷைல் கேத்ரினா [ஏர் இந்தியா] [7] வெற்றி தரிணி கோயல் [சண்டிகார்][6]
அர்பிதா முகர்ஜி [மே.வங்கம்] [6.5] டிரா கிரண் மனிஷா [எல் ஐ சி] [6.5]
ஈஷா [பெட்ரோலியம்] [6] டிரா பாலகண்ணம்மா[தமிழகம்] [6.5]