43வது மகளிர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்  –  சென்னை (ஏழாவது சுற்றின் முக்கிய முடிவுகள்)

தமிழ்நாடு சதுரங்க கழகம் பெருமையுடன் நடத்தும் தேசிய மகளிர் செஸ் போட்டி  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிருந்தும்  முன்னணி வீராங்கனைகள் கலந்து  கொண்டுள்ள இந்த போட்டியின் ஏழாம் சுற்று இன்று காலை நடை பெற்றது.

 

 விஜயலக்ஷ்மி முன்னிலை

தமிழகத்தின் சரண்யா ஏர் இந்தியாவின் விஜயலக்ஷ்மியுடன் மோதினார்.சிசிலியன் முறையிலான ஆட்டத்தில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் ஆடியதில் ஆட்டம் டிரா ஆனது.

 சுவாதி[எல் ஐ சி] சக வீராங்கனை கிரணுடன் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் 2௦ நகர்த்தல்களில் இருவரது ராணிகளும் பல சிப்பாய்களும்   வெட்டுப்பட்டன.51 வது

நகர்த்தலில் அவர்களும் டிரா செய்து கொண்டார்கள்.

 மற்றொரு ஆட்டத்தில் கோம்ஸின் சிப்பாய்களை துவம்சம் செய்த வைஷாலி மூன்று சிப்பாய்கள் அதிகம் பெற்றிருந்தாலும் கோம்ஸிடம் சக்திவாய்ந்த குதிரை இருந்ததால் ஆட்டத்தை டிரா செய்துகொண்டார்.

இன்னொரு ஆட்டத்தில் அனுபவமிக்க கிராண்ட் மாஸ்டர் சௌம்யாவை தமிழகத்தின் பிரியங்கா டிரா செய்தது குறிப்படத்தக்கது.  

 

ஏழாவது சுற்றின் முக்கிய முடிவுகள்:

சரண்யா [தமிழகம்] [5.5]                                   டிரா                                    விஜயலக்ஷ்மி [ஏர் இந்தியா] [6]

சுவாதி [எல் ஐ சி] [5.5]                                          டிரா                          கிரண் மனிஷா [எல் ஐ சி] [5.5]

மேரிஆன் கோம்ஸ்[பெட்ரோலியம்] [5]     டிரா      வைஷாலி[தமிழகம்][5.5]

சௌம்யா [பெட்ரோலியம்] [5]                       டிரா                   பிரியங்கா [தமிழகம்] [5]

மகாலட்சுமி [தமிழகம்] [5]                                டிரா               தரிணி கோயல் [சண்டிகார்] [5]     

 

ஏழாவது சுற்றின் முடிவில் விஜயலக்ஷ்மி தனக்கு அடுத்தவரைவிட அரை புள்ளிகள் மட்டுமே

அதிகம் பெற்று ஆறு புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார்.தமிழகத்தின் சரண்யாவும் வைஷாலியும் மற்றும் எல் ஐ சி யின் சுவாதியும் மொஹந்தியும் ஆக நான்குபேரும் 5.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்கள்.