விஜயலக்ஷ்மி தொடர் முன்னிலை

முதல் ஆட்டத்தில் விஜயலக்ஷ்மி, வெள்ளை நிற காய்களுடன் தமிழகத்தின் திவ்யலக்ஷ்மியை எதிர்த்து ஆடினார். இருவரும் சமபலத்துடன் ஆடினார்.  31 வது நகர்த்தலில் திவ்யலக்ஷ்மி ஒரு சிறிய தவறினால் தனது குதிரையைப்பரிகொடுக்க நேர்ந்தது. 32 வது நகர்த்தலில் தனது தோல்வியை திவ்யலக்ஷ்மி ஒப்புக்கொண்டார்.

இன்னொரு ஆட்டத்தில் தமிழகத்தின் வைஷாலி “பியாஞ்சிடோ’ முறையில் தனது நேர்த்தியான ஆட்டத்தினால் சக வீராங்கனை சரண்யாவை வெற்றிகண்டார்.

  சதுரங்க ஆட்டத்தில் ராணியைவிட சில நேரங்களில் குதிரை சக்திவாய்ந்தது என்பதை மிஷைல் கேத்ரினா இன்று வெளிப்படுத்தினார்.கிரண் மனிஷாவிடம்

இரண்டு ராணிகள் இருந்தபோதிலும் மிஷைல் தனது ஒரு குதிரையினால் ஆட்டத்தை டிரா செய்தார்.

இன்னொரு ஆட்டத்தில் நீண்ட நெடிய போராட்டத்திற்குப்பின் 95 நகர்தலில்

ஸ்வாதி காட்டே பிரதியுஷா போடாவை வெற்றி கண்டு இரண்டாம் இடத்திற்கு

முன்னேறினார்.  

மற்றொரு ஆட்டத்தில் ஆந்திராவின் லஷ்யா,இந்தபோட்டியின் முதல் நிலை

வீராங்கனை ஈஷாவை டிரா செய்து அதிர்ச்சியுறச்செய்தார்.

எட்டாவது சுற்றின் முடிவில் விஜயலக்ஷ்மி 7 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தமிழகத்தின் வைஷாலியும், எல் ஐ சி யின் ஸ்வாதி காட்டேவும்  தலா  6.5 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

 

 விஜயலக்ஷ்மி[ஏர் இந்தியா] [7]                        வெற்றி           திவ்யலக்ஷ்மி [தமிழகம்] [5.5]

வைஷாலி [தமிழகம்] [6.5]                                   வெற்றி             சரண்யா [தமிழகம்] [5.5]

கிரண் மனிஷா மொஹந்தி [எல் ஐ சி ] [6]   டிரா                 மிஷைல் கேத்ரினா [ஏர் இந்தியா] [6]

பிரத்யுஷா போடா [ஆந்திரா] [5]                      தோல்வி         ஸ்வாதி காட்டே[எல் ஐ சி] [6.5]

லஸ்யா [ஆந்திரா] [5.5]                                               டிரா               ஈஷா கரவாடே[பெட்ரோலியம்] [5.5]       

Attachment